கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் கொலை:கைதான மனைவி, கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு
கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான மனைவி, கள்ளக்காதலன் ஆகிய 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான மனைவி, கள்ளக்காதலன் ஆகிய 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சரக்கு வாகன டிரைவர்
தேன்கனிக்கோட்டை உனிசெட்டியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 37). சரக்கு வாகன டிரைவர். இவருடைய மனைவி ரூபா (25). இவர்களுக்கு 2 மகள்கள், மகன் உள்ளனர். ரூபாவிற்கும் மஞ்சுகிரியை சேர்ந்த தங்கமணி (20) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது.
இந்த நிலையில் அய்யப்பன் கடந்த 21-ந் தேதி இரவு வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். குடும்ப பிரச்சினையால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகித்தனர். மேலும் தேன்கனிக்கோட்டை போலீசாரும் ஆரம்பத்தில் தற்கொலை என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
சிறையில் அடைப்பு
அதில் கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால் கள்ளக்காதலன் உதவியுடன் கணவரை கொன்றதாக ரூபா தெரிவித்தார். இதையடுத்து ரூபாவையும், கள்ளக்காதலன் தங்கமணி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த அய்யப்பனின் கை, கால்களை ரூபா கட்டி போட்டிருந்த நிலையில், அங்கு வந்த தங்கமணி அய்யப்பனின் கழுத்தை அறுத்து கொலை செய்ததும் பிறகு, ரூபா தனது கணவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து கைதான ரூபா, கள்ளக்காதலன் தங்கமணி ஆகிய 2 பேரையும் போலீசார் தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் தங்கமணி கிருஷ்ணகிரி கிளை சிறையிலும், ரூபா சேலம் சிறையிலும் அடைக்கப்பட்டார்கள்.
Related Tags :
Next Story