திருச்சி போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு மோப்ப நாய்


திருச்சி போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு மோப்ப நாய்
x
தினத்தந்தி 23 Oct 2021 11:04 PM IST (Updated: 23 Oct 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு மோப்ப நாய்

திருச்சி, அக்.24-
திருச்சி மாநகரில் குற்றப்பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு மோப்ப நாய் உள்ளன. போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு நீண்ட நாட்களாக மோப்ப நாய் இல்லாமல் இருந்தது. இதையடுத்து திருச்சி மாநகர போலீசார் மோப்ப நாய் வேண்டி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி "லேப்டாக்" வகையை சேர்ந்த பிறந்து 45 நாட்கள் ஆன குட்டி நாய் உதகையில் இருந்து வாங்கப்பட்டது. பின்னர் சென்னை கொண்டு செல்லப்பட்டு அங்கு குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் அதற்கு "பாண்ட்" என்று பெயர் சூட்டினார். பின்னர் திருச்சி கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு வந்து போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் ஆகியோரிடம் காண்பிக்கப்பட்டது. இந்த நாய்க்கு முதல் 3 மாதம் திருச்சியில் அடிப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது. பிறகு கோவையில் உள்ள மோப்ப நாய் பயிற்சி பள்ளியில் போதை பொருள் கண்டறிவது குறித்து 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன் பின்னர் திருச்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த மோப்ப நாய்க்கு பயிற்சியாளர்கள் ரமேஷ் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர்.

Next Story