குண்டர் சட்டத்தில் 3 பேர் சிறையில் அடைப்பு


குண்டர் சட்டத்தில் 3 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 23 Oct 2021 11:07 PM IST (Updated: 23 Oct 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

மூலனூர், பெருமாநல்லூர் மற்றும் பொங்கலூரை சேர்ந்த 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருப்பூர்
மூலனூர், பெருமாநல்லூர் மற்றும் பொங்கலூரை சேர்ந்த 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலை வழக்கு
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் பாபுராஜா (வயது 37). இவரது பெற்றோர் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே வாஷிங்டன் நகரில் வசித்து வந்தனர். இந்நிலையில், பாபுராஜா கடந்த மாதம் 27-ந் தேதி பெற்றோரை பார்க்க வந்தார். பின்னர் பெருமாநல்லூரில் கண்ணப்பன் (45) என்பவர் நடத்தி வரும் மதுபானக் கூடத்துக்கு சென்று பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் எழுந்த தகராறில் பாபுராஜா கொலை செயப்பட்டார். 
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பெருமாநல்லூர் போலீசார் பார் உரிமையாளர் கண்ணப்பன் உள்ளிட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
மூலனூர்-பொங்கலூர்
மூலனூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கிளாங்குண்டல் கிராமம் சுள்ளப்பெருக்கி பாளையத்தில் வசித்து வந்த வேலுசாமி, ரவி ஆகிய இருவரும் அடித்து எரித்து கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம் மூலனூர் வெள்ளகோவில் ரோடு தாளக்கரை பிரிவு பகுதியை சேர்ந்த முத்துசாமி (77) என்பவர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். 
இதுபோல் திருப்பூர் வீரபாண்டி குளத்துப்பாளையத்தை சேர்ந்த சிவபெருமாள் என்பவரது மகன் ஹரிகணேஷ் (22). இவர் கடந்த செப்டம்பர் 12-ந் தேதி பொங்கலூரை அடுத்த பொள்ளிக்காளிபாளையம் என்ற இடத்தில், செல்போனில் பேசியபடி நடந்து சென்றவரிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். 
இதுகுறித்து புகாரின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 
இந்த நிலையில் ஹரிகணேஷை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது பல்லடத்தில் 3 வழக்குகள் உள்ளது. 
இதையடுத்து இந்த 3 பேரயைும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஷாங்சாய் பரிந்துரையின் கீழ், திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். இதற்கான ஆணை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களிடம் போலீசார் வழங்கினர்.

Next Story