தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 Oct 2021 11:11 PM IST (Updated: 23 Oct 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்த செய்திகள் வருமாறு:-

ஆற்றில் கிடக்கும் மரங்கள்

மயிலாடுதுறை மாவட்டம், இளையாளூர் கிராமத்தில்  வடகரை மஞ்சள் ஆறு உள்ளது.  கஜா புயலில் தேக்கு மரங்கள் சாய்ந்து ஆற்றுக்குள் விழுந்து கிடக்கின்றன. இதனால் ஆற்றில் நீரோட்டம் தடைப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் வெள்ள நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்து விடுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றில் கிடக்கும்  மரங்களையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                  
                                                                                                                       -ஹாஜா ஷரீப், அறங்கக்குடி.

தினத்தந்தி புகார் பெட்டி செய்தி எதிரொலி:
ஊர் பெயர்பலகை மாற்றம்

மயிலாடுதுறை மாவட்டம் விளநகரில், பல ஆண்டுகளாக ஆறுபாதி ஊர் பெயர் பலகை தவறுதலாக அமைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தவறை சுட்டிக்காட்டி பெயர் பலகையை மாற்றி அமைக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளிவந்ததது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள்.24 மணி நேரத்தில், ஆறுபாதி பெயர் பலகையை அகற்றி குழப்பத்தைத்தீர்த்து வைத்தனர். தவறை சுட்டி காட்டி செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

                                                                                                                   -ஆறுபாதி, பொதுமக்கள்.
காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை

மயிலாடுதுறை நகரில், கடைகளில் விற்பனையாகும் உணவு பொருட்கள், தரமற்று, சுகாதாரமின்றி காணப்படுகிறது. மேலும்  சில கடைகளில் விற்கப்படும் உணவுபொருட்கள் பயன்பாடு, காலாவதி தேதி பதிவிடப்படாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிறுகடைகள் முதல் டீ, காபி ஓட்டல்களில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை வேண்டும்.

                                                                                                              -பொதுமக்கள், மயிலாடுதுறை.

கழிவுநீர் அகற்றப்படுமா?

திருவாரூரில், மேலவடம்போக்கித்தெருவில் உள்ள வடிகாலில் கழிவு நீர் தேங்கி உள்ளது. கடந்த ஒரு மாதமாக கழிவு நீர் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும். பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மூக்கைப்பிடித்து கொண்டு செல்கின்றனர். தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுகள் உற்பத்தியாக டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே வடிகாலில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
                                            
                                                                                                                          -பொதுமக்கள், திருவாரூர்.

உப்புகரிக்கும் குடிநீர்

மன்னார்குடி தாலுகா களப்பால் நாராயணபுரம் கோவில் ஊராட்சியில் 1-வார்டு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியிலிருந்து சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் உப்புகரித்து வருகிறது. உப்பு கரிப்பு அதிகாமாக உள்ளதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் சுமார் 2 கி.மீ. தூரம் சென்று இருசக்கர வாகனத்தில் குடிநீர் எடுத்து வருகின்றனர். பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நல்ல குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                      
                                                                                                                                -பாக்யராஜ், களப்பால் நாராயணபுரம்.


Next Story