பெல் ஊழியரிடம் ரூ.2.95 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


பெல் ஊழியரிடம் ரூ.2.95 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
x
தினத்தந்தி 23 Oct 2021 11:29 PM IST (Updated: 23 Oct 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

பெல் ஊழியரிடம் ரூ.2.95 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி, அக்.24-
பெல் ஊழியரிடம் ரூ.2.95 லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெல் ஊழியர்
திருச்சி கே.கே.நகர் சுந்தர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீஹரி வரதராஜ் (வயது 86). ஓய்வுபெற்ற பெல் ஊழியரான இவர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அப்போது, வீட்டில் இருந்த டெலிபோனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அப்போது, ஒரு மர்ம நபர் பேசினார். அவர், வங்கியிலிருந்து பேசுவதாகவும், உங்கள் ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும்  ஏ.டி.எம் .கார்டு நம்பர், ஏ.டி.எம். ரகசிய எண் ஆகியவற்றை கேட்டுள்ளார். இதனை நம்பிய ஸ்ரீஹரி வரதராஜ் அனைத்து தகவல்களையும் அவரிடம் கூறியுள்ளார்.
மோசடி
இதனைத் தொடர்ந்து அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 95 ஆயிரம் எடுக்கப்பட்டு இருந்தது. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஸ்ரீஹரி வரதராஜ் சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுவிற்ற 2 பேர் கைது
*மணப்பாறையை அடுத்த மாகாளிப்பட்டி பகுதியில் மணப்பாறை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில்மது விற்ற மாகாளிப்பட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி (51), மாலைமடைப்பட்டியை சேர்ந்த லோகநாதன் (49) ஆகியோரை பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
*திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மயங்கி கிடந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ஜினீயர் மாயம்
*திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல தெருவை சேர்ந்தவர் சுகன்யா (27). என்ஜினீயரான இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள மகளிர் விடுதியில் தங்கி ஒரு கால் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் விடுதிக்குத் திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரூ.50 ஆயிரம் பறிப்பு
* திருச்சி பாலக்கரை சேர்ந்தவர் பார்த்திபன் (24). சம்பவத்தன்று இவர் பெல்ஸ் கிரவுண்ட் பிள்ளையார் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருச்சி பாலக்கரை சேர்ந்த தர்மா (27), முருகானந்தம் (26), சத்திரம் பகுதியைச் சேர்ந்த சுனில் (19) ஆகியோர் பார்த்திபனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மா உள்பட 3 பேரை கைது செய்து செய்தனர்.
பாம்பு கடித்து முதியவர் சாவு
*மண்ணச்சநல்லூர் அருகே உள்ள உளுந்தங்குடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). கூலித்தொழிலாளியான இவர் நேற்று வயல் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது புதருக்குள் இருந்த பாம்பு கடித்ததில் மயங்கி விழுந்தார். மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு இறந்தாக தெரிவித்தனர். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story