தேனி மாவட்டத்தில் ஒரேநாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


தேனி மாவட்டத்தில் ஒரேநாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 23 Oct 2021 11:35 PM IST (Updated: 23 Oct 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தேனி:
தேனி மாவட்டத்தில் 410 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதற்காக 81 ஆயிரத்து 990 கோவிஷீல்டு தடுப்பூசி, 4 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி என மொத்தம் 85 ஆயிரத்து 990 டோஸ் தடுப்பூசிகள் முகாம்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன. முகாம் நடந்த இடங்களில் மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 
போடி நகராட்சி பகுதிகளில் நடந்த முகாம்களை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். கோவேக்சின் தடுப்பூசி குறைவான அளவிலேயே தேனி மாவட்டத்தில் இருப்பு இருந்ததால் பெரும்பாலான முகாம்களில் இந்த தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. போடி, தேனி, கம்பம் உள்பட மாவட்டத்தின் பல இடங்களிலும் தடுப்பூசி செலுத்த வந்த மக்கள் பலர் கோவேக்சின் தடுப்பூசி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 
நேற்று ஒரே நாளில் மொத்தம் 50 ஆயிரத்து 319 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதில் முதல் தவணையாக 14 ஆயிரத்து 394 பேரும், 2-வது தவணையாக 35 ஆயிரத்து 925 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 35 ஆயிரத்து 246 ஆக உயர்ந்தது. இதில், முதல் தவணை 6 லட்சத்து 35 ஆயிரத்து 60 பேரும், 2-வது தவணை 3 லட்சத்து 186 பேரும் செலுத்தியுள்ளனர்.

Next Story