21 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா தடுப்பூசி ேபாடப்பட்டது


21 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா தடுப்பூசி ேபாடப்பட்டது
x
தினத்தந்தி 23 Oct 2021 11:53 PM IST (Updated: 23 Oct 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா தடுப்பூசி ேபாடப்பட்டது

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 685 பேருக்கு கொரோனா தடுப்பூசி ேபாடப்பட்டது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6-ம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் உள்ள மையங்களில் இன்று நடந்தது. 

இந்த முகாமினை பல்வேறு இடங்களில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

ஆற்காடு நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் வீடு வீடாகச் சென்று அரசுப் பணியாளர்கள் தடுப்பு சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து தடுப்பூசி போடாதவர்களை முகாமுக்கு அழைத்து வந்து, தடுப்பூசி செலுத்தினர்.

 அவர்களின் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.‌ மாவட்டம் முழுவதும் 21 ஆயிரத்து‌ 685 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Next Story