அன்னவாசலில் வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகைகள் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
அன்னவாசலில் வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகைகளை கொள்ளைடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அன்னவாசல்:
எலக்ட்ரானிக் கடை
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் கறிக்கடை வீதியை சேர்ந்தவர் முகமது யூசுப் (வயது 63). இவர், திருச்சியில் எலக்ட்ரானிக் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு அன்னவாசல் பகுதியில் உள்ளது. இங்குள்ள வீட்டிற்கு வாரத்தில் ஒருமுறை வந்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து, திருமணத்திற்கு செல்வதற்காக அன்னவாசல் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடந்தது. இதைப்பார்த்து முகமது யூசுப் அதிர்ச்சி அடைந்தார்.
27 பவுன் நகைகள் திருட்டு
இதையடுத்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறையில், இருந்த பீரோவின் கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த துணிகள் உள்ளிட்ட பொருட்கள் தரையில் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 27 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும் வீட்டின் அறை முழுவதும் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது.
இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் முகமதுயூசுப் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வீட்டின் பூட்டை உடைத்து 27 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story