அருவிகளில் குளிக்க அனுமதிக்க கோரி குற்றாலத்தில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


அருவிகளில் குளிக்க அனுமதிக்க கோரி குற்றாலத்தில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2021 2:34 AM IST (Updated: 24 Oct 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

அருவிகளில் குளிக்க அனுமதிக்க கோரி குற்றாலத்தில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி:

தென்காசி தெற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் குற்றாலம் பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய தலைவர் முருகன் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணி மாவட்ட பொது செயலாளர் ஜெய்சங்கர் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் செந்தூர்பாண்டியன் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் ராமராஜா, மாவட்ட பார்வையாளர் சோலையப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை, விருதுநகர் மேற்கு மாவட்ட பார்வையாளர் அன்புராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் ராஜா, பொருளாளர் ராமநாதன், மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துக்குமார், பாலகுருநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். 

அருவியில் குளிக்க  அனுமதிக்க வேண்டும்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குற்றாலம் அருவிகளில் கடந்த 2 ஆண்டுகளாக சீசனின்போது சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை தற்போது வரை நீடித்து வருகிறது. தற்போது அரசு பல்வேறு தளர்வுகள் அளித்த நிலையில் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் இங்கு பேரூராட்சி மற்றும் குற்றாலநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான கடைகளின் குத்தகைதாரர்கள், வாடகைதாரர்கள் கடந்த 2 ஆண்டுகளாக வியாபாரம் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.

எனவே அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். வியாபாரிகளின் 2 ஆண்டு குத்தகையை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசு, தென்காசி மாவட்ட நி்ாவாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில், தெற்கு ஒன்றிய துணை தலைவர் திருமுருகன் நன்றி கூறினார்.

Next Story