ஆசிரியை- மாணவர் விஷம் குடித்தனர்
காதலித்த ஆசிரியை- மாணவர் விஷம் குடித்தனர்
குன்னம்:
காதல்
அரியலூர் மாவட்ட பகுதியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்தார். பின்னர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கும், அந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த 15 வயது மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.
இது பற்றி 2 பேரின் வீட்டிலும் தெரியவந்த நிலையில், அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது அந்த மாணவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
விஷம் குடித்தனர்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு ஆசிரியையுடன், அந்த மாணவர் வந்துள்ளார். அங்கு அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் ேநற்று காலை பருத்திக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) அவர்கள் குடித்து விட்டு, காதிலும் ஊற்றிக் கொண்டனர்.
இதையடுத்து இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று முதல் உதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story