கலவையில் நாய்கள் கடித்து குதறியதில் கன்றுக்குட்டி பலி
நாய்கள் கடித்து குதறியதில் கன்றுக்குட்டி பலி
கலவை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள வாழைப்பந்தல் சாலை, நல்லூர் சாலையில் மாட்டு இறைச்சி கடை உள்ளதால் நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. கோழிப் பண்ணையில் உள்ள கோழிகனையும், பொதுமக்கள் தங்கள் நிலத்திற்கு ஓட்டிச்செல்லும் ஆடு, மாடுகளையும் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென விரட்டி கடிக்கின்றன. இதனால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
சென்னசமுத்திரம் சாலையில் உள்ள அன்பழகன் நிலத்தின் அருகே நேற்று முன்தினம் கன்றுக்குட்டியை கட்டி வைத்துள்ளார். 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கன்றுக்குட்டியை கடித்து குதறியதில் கன்றுக்குட்டி இறந்துள்ளது. தெருக்களிலும் நாட்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. எனவே அதிகாரிகள் உடனடியாக கலவையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story