இந்து முன்னணி சார்பில் நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணி சார்பில் நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2021 9:00 PM IST (Updated: 24 Oct 2021 9:00 PM IST)
t-max-icont-min-icon

இந்து முன்னணி சார்பில் நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

உடுமலை, 
கோவில் நகைகளை உருக்கும் தமிழக அரசைக்கண்டித்து இந்து முன்னணி சார்பில் நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
 பொதுக்குழு கூட்டம்
திருப்பூர் தெற்கு மாவட்ட இந்துமுன்னணி பொதுக்குழு கூட்டம் உடுமலை சத்திரம் வீதியில் உள்ள துளுவ வேளாளர் திருமண மண்டபத்தில் நேற்று  நடந்தது. கூட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசினார். மாநில செயலாளர் கிஷோர்குமார், கோட்ட செயலாளர் கிருஷ்ணன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் யு.கே.பி.பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். மேலும் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் தேர்வு நடந்தது.
 ஆர்ப்பாட்டம்
இதைத்தொடர்ந்து மாநிலத்தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- கோவில் நகைகள் உருக்கப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோவில் நகைகளை உருக்கும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.கோவில் நகைகளை உருக்கும் தமிழக அரசைக்கண்டித்து இந்து முன்னணி சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசு, கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும்.  
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

Next Story