சாலை மறியலில் பஸ் கண்ணாடி உடைப்பு 3 வாலிபர்கள் கைது
சாலை மறியலில் பஸ் கண்ணாடி உடைத்த சம்பவத்தில் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஒன்றியத்தில் 22-ந்தேதி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் சுயேச்சை கவுன்சிலர் ஒருவருக்கு ஓட்டுபோட அனுமதிக்காததை கண்டித்து, ஈச்சேரி கிராமத்தை சேர்ந்த ராஜதுரை என்பவரின் தலைமையில் ஒரு தரப்பினர், திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை நோக்கி சென்ற அரசு பஸ் மீது கல் வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது.
இது குறித்து சாரம் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் ஒலக்கூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ராஜதுரை, சிவக்குமார் உள்ளிட்ட 51 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய திண்டிவனம் அடுத்த வைரபுரம் பகுதியை சேர்ந்த மதுரை மகன் விக்னேஷ் (வயது 22), செண்டூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பாவாடை மகன் அங்கமுத்து (23), கொள்ளார் கிராமத்தை சேர்ந்த நெடுஞ்செழியன் காமேஸ்சன் (23) ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story