பி.டி.ஆர். கால்வாய்க்கு வந்த முல்லைப்பெரியாறு தண்ணீர்
வீரபாண்டி அருகே பி.டி.ஆர். கால்வாய்க்கு முல்லைப்பெரியாறு தண்ணீர் வந்தது.
தேனி :
தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாற்று பாசனம் மூலம் 17 ஆயிரம் ஏக்கர் குறுவை நிலங்கள் நேரடியாகவும், சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பயனடைந்து வருகிறது. இது தவிர 18-ம் கால்வாய் மற்றும் பி.டி.ஆர். கால்வாய் மூலம் 80-க்கும் மேற்பட்ட குளங்கள் தண்ணீர் வரத்தை பெறுகிறது. இதில் பி.டி.ஆர். கால்வாய் மூலம் சின்னமனூர் மற்றும் தேனி ஒன்றியத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குளங்கள் பயனடைகின்றன.
முல்லைப்பெரியாற்றில் போதிய தண்ணீர் இல்லாததால் இந்த கால்வாய் தண்ணீர் கடைமடை பகுதிக்கு வருவது கானல் நீராகவே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப்பெரியாற்றில் இருந்து வந்த தண்ணீர் பி.டி.ஆர்.கால்வாயில் வீரபாண்டி அருகே கடைமடை பகுதியான தப்புக்குண்டு வரை வந்துள்ளது.
இதன் மூலம் தர்மாபுரி, பூமலைக்குண்டு, வெங்கடாச்சலபுரம், காட்டுநாயக்கன்பட்டி, தப்புக்குண்டு, சவலப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story