தியாகதுருகம் அருகே குடும்ப தகராறு கணவன் மனைவி கைது


தியாகதுருகம் அருகே குடும்ப தகராறு கணவன் மனைவி கைது
x
தினத்தந்தி 24 Oct 2021 11:01 PM IST (Updated: 24 Oct 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே குடும்ப தகராறு கணவன் மனைவி கைது


கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே மேல்விழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏசுதாஸ்(வயது 53). இவருக்கும் அவரது அண்ணன் ஆரோக்கியதாஸ்(60) என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள தனது நிலத்துக்கு சென்ற ஏசுதாசை ஆரோக்கியதாஸ், இவரது மனைவி சலோத்மேரி(55), மகன் அந்தோணிராஜ் ஆகியோர் சேர்ந்து தாக்கியதை அடுத்து இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த ஏசுதாஸ் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஏசுதாஸ் மனைவி அருள்நாயகி கொடுத்த புகாரின் பேரில் ஆரோக்கியதாஸ், சலோத்மேரி, அந்தோணிராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த தியாகதுருகம் போலீசார் ஆரோக்கியதாஸ், சலேத்மேரி ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் ஆரோக்கியதாஸ் கொடுத்த புகாரின் பேரில் ஏசுதாஸ், இவரது மனைவி அருள்நாயகி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story