2 வது தவணைதடுப்பூசி
சிவகங்கை மாவட்டத்தில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 316 பேர் 2வது தவணைதடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதசூதன் ரெட்டி கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 316 பேர் 2-வது தவணைதடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதசூதன் ரெட்டி கூறினார்.
கொரோனா
பொது சுகாதாரத்துறையின் மூலம் கொரோனா நோய் தொற்றை தடுக்க தடுப்பூசி போடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக வாரந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 6- வது கட்டசிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகங்கை நகர், சிவன்கோவில் அருகில் நடைபெற்ற முகாமை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் 750 முகாம்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. இதில் நகராட்சிப்பகுதியில் 90 மையங்களிலும், பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் 660 இடங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகின்றன. 89,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் மருந்துகள் கையிருப்பில் உள்ளது.
தடுப்பூசி
முகாமில் 50,000 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றது. மாவட்டத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்ட 7 லட்சத்து 15 ஆயிரத்து 256 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அதில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 316 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் டாக்டர் ராம்கணேஷ், நகராட்சி ஆணையர் ராஜேஸ்வரன், நகர் நல மருத்துவர், டாக்டர் கலாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story