வாணியம்பாடியில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
வாணியம்பாடி
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உலக போலியோ ஒழிப்பு தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. டாக்டர் அறிவழகன் தலைமை தாங்கினார். முகாமில் சுமார் 2- தாய்மார்களுக்கு பச்சிளங் குழந்தைகளுக்கான பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
அரசு மருத்துவமனை டாக்டர்கள் தீபலட்சுமி, சத்யா, பாக்கியலட்சுமி ஆகியோர் போலியோ விழிப்புணர்வு குறித்து விளக்கி பேசினர்.
டாக்டர் பாரன் சவுத் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். சமூக ஆர்வலர்கள் சக்கரவர்த்தி, அருண்குமார், கலைமணி, மீனாட்சி, தில்ஷாத்பேகம் மற்றும் மருத்துவமனை செவிலியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story