பரமத்தி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்தி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே உள்ள காளிபாளையத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி வீராயி (வயது 55). இவர் கடந்த 10 ஆண்டுகளாக நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில அவருடைய இளைய மகன் கார்த்திகேயன் நேற்று வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது தாய் வீராயி வீட்டின் முன்பக்க வளாகத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தாயின் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து தனது தந்தை பழனிக்கும், பரமத்தி போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார் வீராயின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Related Tags :
Next Story