இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
x
தினத்தந்தி 24 Oct 2021 11:36 PM IST (Updated: 24 Oct 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

இருதரப்பினர் இடையே தகராறு; 6 பேர் மீது வழக்கு

ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே உள்ள பேரகப்பள்ளியை சேர்ந்தவர் ராஜாரெட்டி. இவரது மனைவி அக்கையம்மா (வயது 48). இவருக்கும், அதேபகுதியை சேர்ந்த எல்லாரெட்டி (60) என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக இருதரப்பினரும் கெலமங்கலம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் எல்லாரெட்டி, நாகலட்சுமி, ராஜா ரெட்டி, அக்கையம்மா, செட்டிரெட்டி மானஷா ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story