மழையினால் பட்டாசு விற்பனை பாதிப்பு


மழையினால் பட்டாசு விற்பனை பாதிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2021 11:50 PM IST (Updated: 24 Oct 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை பகுதியில் மழையினால் பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 150-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன. நேற்று விடுமுறை தினம் என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பட்டாசுகளை வாங்க வியாபாரிகள் குவிந்தனர். இதனால் பட்டாசு கடைகளில் கூடுதலாக தொழிலாளர்களை ஈடுபடுத்தி பட்டாசு விற்பனை செய்தனர். இந்தநிலையில் நேற்று மாலை  மடத்துப்பட்டி, மண்குண்டாம்பட்டி, எட்டக்காபட்டி, பேர்நாயக்கன்பட்டி, சத்திரபட்டி, கணஞ்சாம்பட்டி, வனமூர்த்திலிங்காபுரம், விஜயகரிசல்குளம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து பட்டாசு வாங்க வந்த வியாபாரிகள் மழையினால் பட்டாசுகள் நனைந்து சேதமடைய வாய்ப்புள்ளதால் பட்டாசு வாங்காமல் திரும்பி சென்றனர். மழையினால் பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story