வீணாகும் குடிநீர்


வீணாகும் குடிநீர்
x
தினத்தந்தி 24 Oct 2021 11:53 PM IST (Updated: 25 Oct 2021 12:16 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்ேகாட்டை பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தாமிரபரணி மற்றும் வைகை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அருப்புக்கோட்டை - மதுரை பிரதான சாலையில் திருக்குமரன் நகர் பஸ் நிறுத்தம் அருகே வைகை கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் குழாய் கேட்வால்வு உடைந்து குடிநீர் வீணாகி செல்கிறது. மேலும் கேட்வால்வு உள்ள பகுதி பெரிய பள்ளம் போல் காணப்படுவதால் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் அடிக்கடி பள்ளத்தில் தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே கேட் வால்வை சரிசெய்வதோடு அப்பகுதியில் விபத்து ஏற்படாத வகையில் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story