ரூ.20¼ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்


ரூ.20¼ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
x
தினத்தந்தி 25 Oct 2021 12:24 AM IST (Updated: 25 Oct 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

வெங்கமேட்டில் உள்ள வேளாண்மை விற்பனை மையத்தில் ரூ.20 லட்சத்து 36 ஆயிரத்து 880-க்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.

நொய்யல், 
தேங்காய் பருப்பு
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தேங்காய்களை உடைத்து தேங்காய் பருப்புகளை எடுத்து அதை நன்கு உலர்த்தி வெங்கமேட்டில் உள்ள வேளாண்மை விற்பனை மையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.  தேங்காய் பருப்புகளை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும், பிரபல எண்ணெய் நிறுவனங்களின் ஏஜெண்டுகளும் வந்திருந்து ஏலம் எடுத்து செல்கின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.
ரூ.20¼ லட்சத்துக்கு ஏலம்
கடந்த வாரம் 15 ஆயிரத்து 629 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. இதில் அதிகபட்சம் ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ.99.75-க்கும், குறைந்தபட்சம் ரூ.84.89-க்கும், சராசரி ரூ.95.65-க்கும் விற்பனையானது. வர்த்தகம் மொத்தம் ரூ.14 லட்சத்து 17 ஆயிரத்து 788-க்கு ஆனது. 
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு ‌21 ஆயிரத்து ‌‌‌‌‌936 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.103.30-க்கும், குறைந்த பட்சமாக ரூ.87.29-க்கும், சராசரியாக ரூ.102.60-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.20 லட்சத்து 36 ஆயிரத்து 880-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Next Story