தாமிரபரணி ஆற்றில் தூய்மை பணி


தாமிரபரணி ஆற்றில் தூய்மை பணி
x
தினத்தந்தி 25 Oct 2021 1:19 AM IST (Updated: 25 Oct 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை தாமிரபரணி ஆற்றில் தூய்மை பணி நடந்தது.

நெல்லை:
இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம், நேரு யுவகேந்திரா, நெல்லை மாவட்ட நிர்வாகம், என்.பி.என்.கே. நல்லதை பகிர்வது நம் கடமை நண்பர்கள் மன்றம் இணைந்து நெல்லை கலெக்டர் அலுவலகம் மற்றும் அதன் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் தூய்மை பணி செய்தனர். விளையாட்டு துறை அமைச்சகத்தை சேர்ந்த அன்கித் குமார் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞர் நலன் அலுவலர் ஞான சந்திரன் பேசினார். ம.தி.தா. இந்துக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story