ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
x
தினத்தந்தி 25 Oct 2021 1:49 AM IST (Updated: 25 Oct 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது.

ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படும். அதேபோல, இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்திற்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்திற்கு மாலை 5.30 மணிக்கு வந்தடைந்தார். அதன்பின் இரவு 7.15 மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளியதும் மங்கள ஆராத்தி கண்டருளுளினார். இந்த நிகழ்ச்சி இரவு 8.15 மணிவரை நடைபெற்றது. அப்போது நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர், ஊஞ்சல் மண்டபத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.


Next Story