கோலார் தங்கவயல், பங்காருபேட்டையில் இன்று முழுஅடைப்பு


கோலார் தங்கவயல், பங்காருபேட்டையில் இன்று முழுஅடைப்பு
x
தினத்தந்தி 25 Oct 2021 2:54 AM IST (Updated: 25 Oct 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் இடமாற்றம் செய்வதை கண்டித்து தங்கவயல், பங்காருபேட்டையில் இன்று (திங்கட்கிழமை) முழுஅடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

கோலார் தங்கவயல்:
  
கோலார் தங்கவயல்

  கோலார் தங்கவயலில் தங்க சுரங்கம் ெசயல்பட்டபோது பாதுகாப்பு பணிக்காக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை ஆங்கிலேயர்கள் அமைத்தனர். கா்நாடக மாநிலத்திலேயே, தாலுகாவுக்கு போலீஸ் மாவட்ட அந்தஸ்து கோலார் தங்கவயலுக்கு மட்டும் தான் உள்ளது. இந்த போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தங்கவயலில் இருப்பதால், அந்தப்பகுதி மக்கள் நிம்மதியாக இருப்பதுடன், இந்த சிறப்பு அந்தஸ்தால் ெபருமையும் அடைந்துள்ளனர்.

  இந்த நிலையில், தங்கவயலில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை புதிதாக உதயமான விஜயநகர் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் ெவளியானது. இது தங்கவயல் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கவயல் மக்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.

போலீஸ் நிலையங்கள் மூடல்

  மேலும், தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதர், தங்கவயலில் இருந்து எக்காரணம் கொண்டும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை இடமாற்றம் ெசய்யக்கூடாது என்று வலியுறுத்தி வருகிறார். மேலும் அவர், கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன்சூட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி உள்ளார். அவர்களும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உறுதி அளித்தனர்.

  இதனால் தங்கவயல் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனா். இந்த நிலையில், அதன்பின்னர் நடந்த நிகழ்வுகள் தங்கவயல் மக்களை மீண்டும் அதிர்ச்சி அடைய ெசய்துள்ளது. அதாவது, தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வந்த போலீசார் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் விஜயநகருக்கு இடமாற்றம் ெசய்யப்பட்டனர். மேலும் தங்கவயலில் செயல்பட்டு வந்த 2 போலீஸ் நிலையங்களும் மூடப்பட்டன.

இன்று முழு அடைப்பு

  இதனால் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மீண்டும் தகவல்கள் வெளியாகின. தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை இடமாற்றம் செய்யும் முடிவை பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

  இந்த நிலையில் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்ைதை இடமாற்றும் முடிவை கண்டித்து கோலார் தங்கவயல், பங்காருபேட்டை தொகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) முழுஅடைப்பு போராட்டத்துக்கு வக்கீல் சங்கம், தமிழ்ச்சங்கம், கன்னட அமைப்புகள், வியாபாரிகள் சங்கம், தனியார் பஸ் டிரைவர்கள் சங்கம், ஆட்டோ டிரைவர்கள் சங்கம், காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்), அ.தி.மு.க., தி.மு.க., மனித உரிமைகள் அமைப்பு, பி.இ.எம்.எல். தொழிலாளர் சங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட பல்வேறு அமைப்பினரும், கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

வேண்டுகோள்

  அதன்படி கோலார் தங்கவயல், பங்காருபேட்டை பகுதியில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தங்கவயல், பங்காருபேட்டையில் நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும், கடைகள், வணிக நிறுவனங்களை திறக்க வேண்டாம் என்றும் போராட்ட குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story