கர்நாடகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்க பள்ளிகள் இன்று திறப்பு


கர்நாடகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்க பள்ளிகள் இன்று திறப்பு
x
தினத்தந்தி 25 Oct 2021 3:26 AM IST (Updated: 25 Oct 2021 3:26 AM IST)
t-max-icont-min-icon

20 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்க பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது.

பெங்களூரு:

கட்டாயம் முகக்கவசம்

  கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையை தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதையடுத்து 6 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் ஏற்கனவே திறக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் கர்நாடகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகள் 25-ந் தேதி (அதாவது இன்று) திறக்கப்படும் என்று கர்நாடக அரசு கடந்த வாரம் அறிவித்தது.

  அதன்படி கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி பள்ளிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளுக்கு மதிய உணவு

  50 சதவீத குழந்தைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், முதல் ஒரு வாரம் பள்ளிகளை அரை நாள் மட்டுமே நடத்த வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இந்த ஒரு வாரம் பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 1-ந் தேதி முதல் பள்ளிகள் முழுமையாக செயல்படும் என்றும், அன்று முதல் மதிய உணவு வழங்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.

  பள்ளிகளில் ஒரு மாணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. 20 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால், வகுப்புகளுக்கு குழந்தைகள் ஆர்வமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story