செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 25 Oct 2021 5:33 AM IST (Updated: 25 Oct 2021 5:33 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 96 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 71 ஆயிரத்து 150-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 67 ஆயிரத்து 621 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,501- ஆக உயர்ந்துள்ளது. 1,028 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 34 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 745- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 73 ஆயிரத்து 127 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,256 பேர் உயிரிழந்துள்ளனர். 362 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story