தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்களுக்கான போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு
தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்களுக்கான போனஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது
தூத்துக்குடி:
உப்பளத் தொழிலாளர்களுக்கு 2021-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர் சங்கங்களை சேர்ந்தவர்களுக்கும், உப்பு தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை உப்பு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் 2021-ம் ஆண்டு குறைந்த பட்சம் முழு அளவுக்கு வேலைக்கு வந்த உப்பு வாருதல் தொழிலாளிக்கு ரூ.5950-ம், பிற பணிகள் செய்யும் தொழிலாளிக்கு ரூ.5625-ம் தீபாவளி போனசாக வழங்க வேண்டும். இந்த தீபாவளி போனஸ் 31.10.2021-க்குள் வழங்கப்பட வேண்டும். மேலும், 10 நாள் விடுமுறை சம்பளம், தொழிலாளர்களுக்கு கண்ணாடி, மிதியடி வகைக்கு ரூ.300 சேர்த்து வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story