நண்பர்களுடன் மது குடித்த வாலிபர் சாவு. கொலையா? போலீஸ் விசாரணை


நண்பர்களுடன் மது குடித்த வாலிபர் சாவு. கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 25 Oct 2021 9:20 PM IST (Updated: 25 Oct 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

நண்பர்களுடன் மது குடித்த வாலிபர் சாவு

அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த அவினாசி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் அருண் (வயது 32). திருமணம் ஆகாதவர். கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். இரவு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் மறுநாள் காலை தேடிய போது அங்குள்ள பச்சையம்மன் கோவில் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததார். 

மது போதையில் கீழே விழுந்து இறந்திருப்பார் என எண்ணி குடும்பத்தினர், அவருடைய உடலை அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது. அருண் சாவில் சந்தேகம் அடைந்த தந்தை கோவிந்தராஜ் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து புதைக்கப்பட்ட அருண் உடலை தோன்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிரு செய்துள்ளனர். மேலும் அருணுடன் சேர்ந்து மது அருந்தியவர்களையும் பிடித்து, அருண் கொலைசெய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story