பழனியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


பழனியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2021 4:17 PM GMT (Updated: 25 Oct 2021 4:17 PM GMT)

பழனியில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பழனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு உயரம் தடைபட்டோர் பிரிவு மாநில செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட செயலாளர் நூருல்ஹூதா, நகர செயலாளர் தங்கவேல், ஒன்றிய செயலாளர் கண்ணுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, உயரம் தடைபட்டோரை கடும் ஊனமுற்றோராக அறிவித்து அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை வழங்க வேண்டும், கல்வி வேலைவாய்ப்பில் சிறப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் உயரம் தடைபட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story