கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தங்க நாணயம்; கலெக்டர் விசாகன் வழங்கினார்


கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தங்க நாணயம்; கலெக்டர் விசாகன் வழங்கினார்
x

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக கலெக்டர் விசாகன் வழங்கினார்.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 17 லட்சத்து 30 ஆயிரத்து 600 பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. இதற்காக கடந்த 24-ந்தேதி 1,032 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அதன்மூலம் ஒரே நாளில் 81 ஆயிரத்து 755 பேர் தடுப்பூசி செலுத்தினர்.
இதனால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 16 ஆயிரத்து 836 ஆனது. இது 70.3 சதவீதம் ஆகும். இதற்கிடையே மெகா முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பரிசு கூப்பன்கள், பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மாவட்ட அளவில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார். அதில் 8 பேருக்கு தங்க நாணயமும், 2 பேருக்கு செல்போனும், ஒருவருக்கு டி.வி., ஒருவருக்கு குளிர்பதன பெட்டி, ஒருவருக்கு சலவை எந்திரம் ஆகியவை வழங்கப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி கலெக்டர் பிரியங்கா, துணை கலெக்டர் விசுவநாதன், நேர்முக உதவியாளர் (பொது) மாறன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story