கடை பணியாளர்களுக்கு தடுப்பூசி
கடை பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் கடைவீதிகளில் ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் முருகவேல் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ஞானசேகர், ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் (பொறுப்பு) முனீஸ்வரி, ஆர்.எஸ். மங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் மெய்மொழி ஆகியோர் முன்னிலையில் கடைகள், வணிக நிறுவனங்களில் உரிமையாளர் மற்றும் பணிபுரியும் பணியாளர்கள் அனை வரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் ஆர்.எஸ்.மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் முருக பாண்டி, ஆர்.எஸ்.மங்கலம் உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராஜ், சுகாதாரத்துறை ஆய்வாளர் ராமநாதன், மருத்துவம செவிலியர்கள், ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story