கஞ்சாவுடன் 2 பேர் கைது


கஞ்சாவுடன் 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2021 11:07 PM IST (Updated: 25 Oct 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொண்டி, 
தொண்டி, நம்புதாளை, சோளியக்குடி பகுதிகளில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோளியக்குடி பஸ் நிலைய பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டு இருந் தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனர். 
அதனை தொடர்ந்து அவர்களிடம் சோதனையிட்டபோது 1½ கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை கைப்பறிய போலீ சார் புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாகுடியை சேர்ந்த பாலமுருகன் (வயது29), நாகை மாவட்டம் தரங்கம்பாடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வடிவேல் (50) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தொண்டி போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story