ஆக்கிரமித்து கட்டப்பட்ட 47 வீடுகள் இடித்து அகற்றம்
நன்னிலம் அருகே சக்கரை குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 47 வீடுகள் கோர்ட்டு உத்தரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டது.
நன்னிலம்;
நன்னிலம் அருகே சக்கரை குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 47 வீடுகள் கோர்ட்டு உத்தரவின் பேரில் இடித்து அகற்றப்பட்டது.
சக்கரை குளம்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேரூராட்சியில் சக்கரை குளம் உள்ளது. இதனால் இந்த பகுதி சக்கரை குளத்தெரு என அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக 45-க்கும் மேற்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் குளக்கரையை ஆக்கிரமித்து குடிசைவீடுகள் அமைத்து, வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தினக்கூலி வருவாயை கொண்டு வாழ்க்கை நடத்தும் ஏழை விவசாய கூலித்தாழிலாளர்கள் ஆவர். இந்தநிலையில் 2017-ம் ஆண்டு, சமூக ஆர்வலர் ஒருவர் இந்த பகுதியில் உள்ளநீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின், தீர்ப்பில் குளக்கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது.
பருத்தி திடல்
இந்தநிலையில் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தும் வகையில், அங்கு குடியிருப்பவர்களுக்கு வருவாய்த்துறையினர் சக்கரை குளத்துக்கு அருகில், 600 மீட்டர் தொலைவில் உள்ள, பருத்தி திடலில், இடம் ஒதுக்கீடு செய்த, அளவீடுகள் செய்யப்பட்டு தரப்பட்டுள்ளது. ஆனால் பருத்தி திடலுக்கு செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லை. வயல் வரப்புகளில் தான் குடியிருப்புவாசிகள் செல்லும் நிலை உள்ளது. எனவே குளக்கரை ஆக்கிரமிப்பில் இருக்கக்கூடியவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள, பருத்தி திடலுக்கு செல்ல சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, செய்து தரக்கோரி 47 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் தமிழக முதல்-அமைச்சர் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் மனு அளித்தனர். மேலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்த பின் ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் என கூறினர்.
இடித்து அகற்றப்பட்டன
பின்னர், தங்களின் எதிர்ப்பை காட்டும் வகையில் சக்கரை குளத்தில், தங்களின் குடியிருப்பில் கருப்புக் கொடிகளைகட்டி வைத்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை கோர்ட்டு உத்தரவுப்படி நன்னிலம் தாசில்தார், பேரூராட்சி செயல் அலுவலர், மற்றும் போலீசார் பொக்லின் எந்திரத்துடன் சக்கரை குளக்கரைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் குளக்கரையில் இருந்த 47 வீடுகளை பொக்லின் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். பல ஆண்டுகளாக இந்த பகுதியில் குடியிருந்த மக்கள் தங்கள் வீடுகள் இடித்து அகற்றப்பட்டதை கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். காலை சுமார்8.30 மணிக்கு தொடங்கிய வீடுகளை இடித்து அகற்றும் பணி மதியம் 2 மணிக்கு நிறைவடைந்தது.
குளக்கரையில் இருந்த 44 குடிசை வீடுகள், 2 ஓட்டு வீடுகள் மற்றும் ஒரு மாடி வீடு உள்பட மொத்தம் 47 வீடுகள் இடித்து அகற்றப்பட்ட சம்பவம் இந்த பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story