வாலிபர் ஒருவர் இறந்த வழக்கில் முதியவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை


வாலிபர் ஒருவர் இறந்த வழக்கில் முதியவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை
x
தினத்தந்தி 26 Oct 2021 12:34 AM IST (Updated: 26 Oct 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் ஒருவர் இறந்த வழக்கில் முதியவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே எம்.ராசியமங்கலத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 80). விவசாயியான இவருக்கு கறம்பக்குடியில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலையில் வயல் உள்ளது. இந்த வயலில் எலித்தொல்லையின் காரணமாக மின் வேலி அமைந்திருக்கிறார். இந்த மின்வேலியை கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி சாந்தம்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன்(36) மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து இறந்தார். அவர், மின் வேலியால் இறந்தது தெரியமால் இருக்க அவரது உடலை பக்கத்து தரிசு நிலத்தில் தூக்கி போட்டு விட்டு ரெங்கசாமி தலைமறைவானார். இது தொடர்பாக ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெங்கசாமியை கைது செய்தனர்.
4 ஆண்டுகள் சிறை தண்டனை
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குருமூர்த்தி நேற்று தீர்ப்பளித்தார். இதில், மின் வேலியை அமைத்து விபத்தை ஏற்படுத்தியற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், இறந்தவரின் உடலை மறைத்ததற்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டதால் அவர் 4 ஆண்டு சிறை தண்டனை அனுபவிப்பார்.

Next Story