‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு வந்த குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு வந்த குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு வந்த குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குளத்துக்கு படித்துறை அமைக்கப்படுமா?
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா அக்கரைவட்டம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் ஒன்று உள்ளது. இந்தக்கோவிலின் அருகே பக்தர்கள் வசதிக்காக குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தில் படித்துறை அமைக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளத்தில் நீராட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும், பெண்கள் குழந்தைகள் படித்துறை இல்லாததால் குளத்தில் இறங்குவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அக்கரைவட்டம் கிராமத்திலுள்ள குளத்தில் படித்துறை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், ஒரத்தநாடு.
-பொதுமக்கள், ஒரத்தநாடு.
வேகத்தடை வேண்டும்
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் பாபு ஹவுஸ் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக இருசக்கரம் மற்றும் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் சென்று வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சாலையை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றன. மேலும் வாகனங்கள் வேகமாக வந்து செல்வதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அந்தப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-கலைச்செல்வன், தஞ்சாவூர்.
-கலைச்செல்வன், தஞ்சாவூர்.
நாய்கள் தொல்லை
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் பெரியக்கோட்டை பகுதியில் நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன.இந்த நாய்கள் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை வேட்டையாடி செல்கின்றன.மேலும் சாலையில் செல்லும் பெண்கள் குழந்தைகளை விரட்டி சென்று கடிக்கின்றன.இதனால் சாலையில் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் இருசக்கர மற்றும் கார்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தி செல்கின்றன.இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்லும் சூழல் ஏற்பட்டு விபத்துக்களில் சிக்கிக்கொள்கின்றனர்.எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பாரதிராஜா, மதுக்கூர்.
குரங்குகள் அட்டகாசம்
தஞ்சை தாலுகா மாத்தூர் மேற்கு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிகின்றன.இந்த குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் வைத்துள்ள பொருட்கள் மற்றும் உணவு பொருட்களை எடுத்து செல்கின்றன.இதனால் வீட்டில் உள்ள பெண்கள் குழந்தைகள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். இதேபோல், அந்த பகுதியில் காட்டு பன்றிகளும் விவசாய நிலத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.இதனால் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர்.எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகள் மற்றும் காட்டுப்பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-யோகராஜா, தஞ்சாவூர்.
தாமரைக்குளம் தூர்வாரப்படுமா?
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பேரூராட்சி 15-வது வார்டு பட்டம் பகுதியில் உள்ள பிரசித்திப்பெற்ற காசிவிசுவநாதர் கோவில் அருகே தாமரைக்குளம் உள்ளது. இந்த குளம் பட்டம் பகுதியில் உள்ள கிராமமக்களின் முக்கிய நீர்ஆதாரமாக விளங்கி வருகிறது. தற்போது, தாமரைக்குளம் தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் குளம் விஷப்பூச்சிகளின் கூடாரமாக திகழ்ந்து வருகிறது. இந்த விஷப்பூச்சிகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமரைக்குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-விஸ்வநாதன், திருப்பனந்தாள்.
Related Tags :
Next Story