தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:
சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தை சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சங்கதலைவர் மோகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மாரியப்பன் முன்னிலை வகித்து போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தூய்மைப்பணியை தனியார் மயமாக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு பணியின்போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாநகர பகுதியில் பணிபுரியும் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story