பள்ளிக்கு சென்றபோது குப்பை லாரி மோதி போலீஸ்காரர் மகள் பலி
கொளத்தூர் அருகே குப்பை லாரி மோதி பள்ளிக்கு சென்ற போலீஸ்காரர் மகள் பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்குன்றம்,
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் சுரேஷ். போலீஸ்காரரான இவர், சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் சுடர்விழி (வயது 13). இவர், கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை சுடர்விழி, தனது உறவினரான ஜெகநாதன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். கொளத்தூர் பேப்பர் மில்ஸ் ரோடு அருகே வந்தபோது, எதிரே வந்த குப்பை லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மாணவி சுடர்விழி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து நடந்த உடன் குப்பை லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அரி வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குப்பை லாரி டிரைவரை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story