திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் மோதல்; 3 பேர் மீது வழக்கு


திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் மோதல்; 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 26 Oct 2021 1:19 PM IST (Updated: 26 Oct 2021 1:19 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே முன்விரோததால் மோதலில் ஈடுப்பட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் பகுதியை சேர்ந்தவர் ராம்ராஜ். இவர் நேற்று முன்தினம் வேலையின் காரணமாக அந்த வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த சதீஷ், புகேஷ் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு ராம்ராஜை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர். பதிலுக்கு ராம்ராஜ், சதீஷ், புகேசை தாக்கியுள்ளார்.

இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது சம்பந்தமாக சதீஷ், புகேஷ், ராம்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story