திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2021 1:38 PM IST (Updated: 26 Oct 2021 1:38 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைபட்டா என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 365 கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுகொண்ட கலெக்டர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

பின்னர் அவர் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.3 ஆயிரத்து 200 மதிப்புள்ள காதொலி கருவியை இலவசமாக வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, தனித் துணை கலெக்டர் ஜோதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story