குன்னூர் ஊட்டி சாலையில் மண்சரிவு
குன்னூர் ஊட்டி சாலையில் மண்சரிவு
குன்னூர்
தொடர் மழை காரணமாக குன்னூர்-ஊட்டி சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூரில் மழை
ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் குன்னூர் பகுதியில் வடகிழக்கு பருவ மழை பெய்வது வழக்கமாக உள்ளது. இந்தமழையின் போது குடிநீர் ஆதாரங்கள் நிரம்பி விடும். இந்த ஆண்டுக்கான வடகிழங்கு பருவமழையையொட்டி குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குன்னூரில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.
அதேபோல் நேற்று அதிகாலை முதலே குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மண் சரிவு
இந்த மழையின் காரணமாக குன்னூர் -ஊட்டி சாலையில் பிளாக் பிரிட்ஜில் தனியார் தேயிலை தோட்டத்தின் ஒரு பகுதி இடிந்ததால் மண்சரிவு ஏற்பட்டு சாலையில் விழுந்தது. மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்த இடத்தில் சிறிய வாகனம் மட்டுமே செல்ல வழி இருந்தது. கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பிளாக் பிரிட்ஜ் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட மண்சரிவை அகற்ற தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story