சிறுமியை காதல் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது


சிறுமியை காதல் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2021 10:12 PM IST (Updated: 26 Oct 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே சிறுமியை காதல் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள குளத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 29). கூலித்தொழிலாளி. இவருக்கும், நிலக்கோட்டையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மலர்ந்தது. 
இதையடுத்து அவர்கள் திருமணம் செய்து, குளத்தூரில் தனியாக வசித்து வந்தனர். இதற்கிடையே சிறுமி கர்ப்பமானார்.  இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பிரசவத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியின் வயதை டாக்டர்கள் சரிபார்த்தபோது, அவருக்கு 17 வயது மட்டுமே ஆகி இருப்பது தெரியவந்தது. உடனே இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பயிற்சி) இலக்கியா விசாரணை நடத்தினார். 
இதையடுத்து திருமண வயதை எட்டாத சிறுமியை திருமணம் செய்ததுடன், கர்ப்பமாக்கிய ஜெயராம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

Next Story