சேந்தமங்கலம் அருகே மதுபாட்டில் வாங்கி வரச்சொல்லி தொழிலாளியை தாக்கிய கும்பல்-மினிபஸ் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு


சேந்தமங்கலம் அருகே மதுபாட்டில் வாங்கி வரச்சொல்லி தொழிலாளியை தாக்கிய கும்பல்-மினிபஸ் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Oct 2021 10:23 PM IST (Updated: 26 Oct 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே மதுபாட்டில் வாங்கி வரச்சொல்லி தொழிலாளியை தாக்கிய கும்பல், அந்த வழியாக வந்த மினிபஸ் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேந்தமங்கலம்:
6 பேர் கும்பல்
சேந்தமங்கலம் அருகே உள்ள சிவநாயக்கன்பட்டி ஊராட்சி ரைஸ்மில் காலனியை சேர்ந்தவர் வேலுசாமி. தொழிலாளி. இவர் நேற்று அந்த பகுதியில் சாலையோரம் அமர்ந்திருந்தார். அப்போது எழுவம்பட்டியை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் வேலுசாமியிடம் டாஸ்மாக் கடை எங்கு உள்ளது என்று கேட்டனர். மேலும் அவரை மதுபாட்டில்கள் வாங்கி வரச்சொல்லி கட்டாயப்படுத்தினர். அதற்கு வேலுசாமி மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் வேலுசாமியை தாக்கினர். மேலும் அந்த வழியாக வந்த மினிபஸ்சை மறித்து முன்பக்க கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்டனர்.
செல்போன் உடைப்பு
அப்போது பஸ்சின் டிரைவர், கண்டக்டர் அவர்களை செல்போனில் வீடியோ எடுத்தனர். இதனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவர்களின் செல்போனை பறித்து கீழே போட்டு உடைத்து ரகளையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
இதையறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். கும்பல் தாக்குதலில் காயமடைந்த வேலுசாமி சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story