கருப்பு பன்னீர் திராட்சை விலை வீழ்ச்சி


கருப்பு பன்னீர் திராட்சை விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 26 Oct 2021 10:26 PM IST (Updated: 26 Oct 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

கம்பம் பகுதியில் கருப்பு பன்னீர் திராட்சை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கம்பம்: 

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கம்பம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழை, தென்னை மற்றும் காய்கறிகளை பயிர் செய்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீர் திராட்சை சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. 

எல்லா காலங்களிலும் திராட்சை விளையக்கூடிய சீதோஷ்ண நிலை தமிழகத்திலேயே தேனியில் மட்டும் தான் உள்ளது. இதனால் திராட்சை விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். 
இங்கும் விளையக்கூடிய திராட்சைகளை வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து கொள்முதல் செய்து தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திராவிற்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கருப்பு பன்னீர் திராட்சை கேரளாவுக்கு ஏற்றுமதியாகவில்லை. இதனால் கருப்பு பன்னீர் திராட்சை விலை வீழ்ச்சி அடைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.40-க்கு விற்ற கருப்பு பன்னீர் திராட்சை நேற்று கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது. இது குறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, தொடர் மழை காரணமாக கேரளாவில் மார்க்கெட்டில் திராட்சை விற்பனை இல்லை. இதனால் திராட்சை தோட்டங்களில் கொள்முதல் செய்யும், வியாபாரிகள் உள்ளூர் சந்தைகளுக்கு அனுப்புகின்றனர். மேலும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதால் இன்னும் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றனர். 



Next Story