15 பேரை கடித்து குதறிய நாய்
15 பேரை கடித்து குதறிய நாய்
தேன்கனிக்கோட்டை, அக்.27-
தேன்கனிக்கோட்டை அருகே 15 பேரை கடித்துக் குதறிய நாயை பொதுமக்கள் அடித்துக்கொன்றனர்.
15 பேரை நாய் கடித்தது
தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூர் கிராமத்தில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்தன. இதில் சில நாய்கள் வெறிபிடித்து சாலையில் செல்பவர்களை விரட்டி விரட்டி கடித்தது.
அப்படி நாய்கள் கடித்ததில் கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த ராமன்னா (வயது 70) குள்ளன்னன் (65) ஈரப்பா (59) பசவராஜ் (35) நாகராஜ் (70) உள்ளிட்ட 15 பேர் படுகாயமடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடித்துக்கொன்றனர்
அதன்பிறகும் நாய்கள் தொல்லை அதிகமானது. சாலையில் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நாயை அடித்துக்கொல்ல முடிவு செய்தனர்.
அதற்காக கற்கள், உருட்டு கட்டைகளை எடுத்துக்கொண்டு நாயை விரட்டி சென்றனர். நாய் நாலாபுறமும் ஓடியது. அப்படி இருந்தும் பொதுமக்கள் அந்த நாயை சுற்றி வளைத்து நின்று சரமாரியாக தாக்கினர். இதில் நாய் சம்பவ இடத்திலேயே இறந்தது. உடனே நாயை அங்கு சாலையோரத்தில் புதைத்தனர். அதன்பிறகே அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
பரபரப்பு
ஆனாலும் நாய் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
15 பேரை கடித்து குதறி நாயை பொதுமக்கள் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story