இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிடக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிடக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை கைவிடக்கோரி நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில் முன்பு இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் கணேஷ், விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏளாமான இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர்.
பக்தர்கள் காணிக்கையாக அளித்த கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். நகைகளை உருக்க வேகம் காட்டும் அரசு, கோவில் நிலங்களை மீட்க தீவிரம் காட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
வேதாரண்யம்
இதேபோல வேதாரண்யம் வடக்கு வீதி மேலவீதி சந்திப்பில், இந்து முன்னணி சார்பில் அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர் வேதபிரசாத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வக்கீல்கள் முரளி, ஹரி கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி அமைப்பினர் கலந்து கொண்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்க நகைகளை உருக்கும் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும், ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story