நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
தேனியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
தேனி:
சின்னமனூர் அக்ரஹாரம் தெருவை சேர்ந்த அழகர்சாமி மனைவி ராஜாத்தி (வயது 72). இவர் நேற்று தேனி வி.ஐ.பி. நகரில் உள்ள தனது மகன் ராஜ்குமாரை பார்க்க அவருடைய வீட்டுக்கு வந்தார். நேற்று பிற்பகல் 3 மணியளவில் வீட்டுக்கு அருகில் வந்து கொண்டு இருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் அவரை பின்தொடர்ந்து வந்தனர்.
மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த நபர் திடீரென ராஜாத்தி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தார். பின்னர் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து தேனி போலீஸ் நிலையத்தில் ராஜாத்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story