திருவெண்ணெய்நல்லூர் அருகே தீ விபத்து: 5 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே தீ விபத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆமூர் காலனி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மச்சி. இவரது கூரை வீடு நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.
மளமளவென எரிந்த தீ, அருகே இருந்த பெருமாள் மனைவி அருந்தாமணி, ராமசாமி மகன் தண்டபாணி, ராமசாமி மகன் தீர்த்தமலை, சாமிக்கண்ணு மகன் குமார் ஆகியோரின் கூரை வீடு வீடுகளுக்கு பரவி எரிந்தது.
இதுபற்றி அறிந்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் சுந்தரராஜன், திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோ ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் 5 பேர் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து சாம்பலானது. இதன் சேத மதிப்பு ரூ. 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story