கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்


கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்
x
தினத்தந்தி 26 Oct 2021 11:19 PM IST (Updated: 26 Oct 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வர வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா புங்கம்பாடி, நெல்வாய்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

களம்பூர் சித்தேரி கோடி நீரால் களம்பூர் சோழந்தாங்கல் ஏரி நிரம்பி சோழந்தாங்கல் ஏரியில் இருந்து விழும் கோடி நீர் நெல்வாய்பாளையம், புலவன்பாடி, அரையாளம, மருசூர் ஆகிய ஏரிகளுக்கு செல்லும் வகையிலும் மற்றும் சோழந்தாங்கல் ஏரியின் கீழ் உள்ள நிலங்களுக்கு பாசன வசதி பெறும் வகையிலும் இருந்தது. 

ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக இந்த ஏரிகளுக்கு நீர் வருவது இல்லை. சோழந்தாங்கல் ஏரி நீர்வரத்து கால்வாய், நெல்வாய்பாளையம் ஏரி நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாலும், தூர்வாராததாலும் நீர்வரத்து இல்லாமல் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். 

இதனால் மேற்கண்ட கிராமங்களிலும் நிலத்தடி நீர் குறைந்து குடிநீருக்காக சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. எனவே, ஏரி கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story