பாறைகளில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகளை அதிகாரிகள் வெடிக்க செய்தனர்


பாறைகளில் வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகளை அதிகாரிகள் வெடிக்க செய்தனர்
x
தினத்தந்தி 26 Oct 2021 11:43 PM IST (Updated: 26 Oct 2021 11:43 PM IST)
t-max-icont-min-icon

ஜெலட்டின் குச்சிகளை அதிகாரிகள் வெடிக்க செய்தனர்

ஆற்காடு

ரத்தினகிரி அருகே பாறையை உடைக்க வைக்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகளை அதிகாரிகள் வெடிக்க செய்தனர். அதை வைத்தவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கல்குவாரி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி அருகே உள்ள நாராயணபுரம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு டெண்டர் விடப்பட்டு தனியார் நிறுவனத்தின் மூலம் கல்குவாரி இயங்கி வந்துள்ளது. டெண்டர் காலம் முடிந்த பின்பும் தொடர்ந்து கல்குவாரி செயல்பட்டு வந்ததால் அப்பகுதி மக்கள் அரசுக்கு புகார் மனு அளித்தனர். 

அதன்பேரில் கல்குவாரி மூடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்குவாரி அரசு அனுமதியின்றி முறைகேடாக இயக்கி வெடி வைத்து கற்களை உடைத்து லாரிகள் மூலம் ஏற்றிச் சென்றனர். இது தொடர்பாக அரசு சார்பில் விசாரணை செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல் குவாரியை நிரந்தரமாக மூடினர்.

அதிகாரிகள் வெடிக்கசெய்தனர்

 ஆனால் கற்களை உடைக்க பாறையில் துளையிட்டு வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகளை அகற்றாமல் விட்டுவிட்டனர். இதனால் எந்த நேரமும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட புவியியல் மற்றும் கனிம வளத்துறை அலுவலர் பெர்னாட் தலைமையில் வாலாஜா தாசில்தார் ஆனந்தன் மற்றும் வருவாய் துறையினர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
 
மேலும் பாறைகளில் துளையிட்டு வைக்கப்பட்டிருந்த ஜெலட்டின் குச்சிகளை வெடிக்கச் செய்தனர். மேலும் அரசு டெண்டர் விடப்பட்ட காலம் முடிந்த பின்னரும் கல்குவாரியில் வெடிவைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் கவுதமி ரத்தினகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story